துயர் பகிர்வு

சண்முகம் சொல்வேந்தன்(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உதவி முகாமையாளர்)

தோற்றம் : 1950-12-02

மறைவு : 2020-12-20


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சொல்வேந்தன் 20.12.2020 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம் அம்மாக்குட்டியின் கனிஷ்ர புத்திரனும், காலஞ்சென்ற அகஸ்ரீன் திரேசம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், செலஸ்ரீனா (றஞ்சினி) அவர்களின் பாசமுள்ள கணவரும், சுதர்சன் (கனடா), சுபாஷினி (அமெரிக்கா) ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்றவர்களான தம்பையா, சின்னத்துரை, பொன்னுத்துரை (எஸ்போ) லட்சுமி, செல்லம்மா, சின்னம்மா மற்றும் இராசமணி, மங்கையகரசி, சரவணமுத்து, சரச்சந்திரன், காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், உஷாந்தினி, ராஜசுரேந்திரன் ஆகியோரின் மாமனாரும், செரீனா, அக்ஷயன், சதூசன், அகனயா ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற ஸ்ரான்லி மற்றும் அன்ரன், சந்திரன், றஜனி, மாலினி, ரஞ்சன், ரவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (21.12.2020) திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
77, இராசாவின் தோட்டம்.
021 222 2694, 077 691 3148