துயர் பகிர்வு

திருமதி நாகேஸ்வரி சிவபாலன்

தோற்றம் : 1956-03-24

மறைவு : 2020-12-22


  • மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகேஸ்வரி சிவபாலன் நேற்று(22.12.2020) செவ்வாய்க்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற இராமலிங்கம்-ஆச்சிமுத்து தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலாயுதம்-சின்னப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற சிவபாலன் அவர்களின் அன்பு மனைவியும், ஜெயந் தினி, சுகந்தினி, காலஞ்சென்ற சிவசங்கர் மற்றும் சிறிசங்கர் (பிரான்ஸ்) ரவிசங்கர் (பிரான்ஸ்) கமலபவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ் சென்ற புவனேஸ்வரி மற்றும் இராசம்மா, கமலாம்பிகை ஆகியோரின் சகோதரி யும், காலஞ்சென்ற சத்தியானந்தம் மற்றும் கமலதாசன், குமுதினி, றஞ்சித்பாபு (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும், விதுர்சன், கனிஸ்ரன், சரணிகா, மதுசாந், சஸ்மிதா, கவிசன், திரிஜா, அபிஷா, அஸ்வின், சபிர்ணா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், செல்லத்தம்பி, தம்பிராசா மற்றும் இராசமணி, கனகம்மா, குணரெத்தினம், காலஞ்சென்றவர்க ளான பாலசிங்கம், வீரசிங்கம் மற்றும் மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.12.2020) புதன்கிழமை பிற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக கேரதீவு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.