துயர் பகிர்வு

நாகேந்திரசர்மா சுவர்ணலட்சுமி

தோற்றம் : 1946-06-26

மறைவு : 2020-12-29


  • மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாழினை வாழ்விடமாகவும் தற்போது சுன்னாகம் உடுவில் தொம்பை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாகேந்திரசர்மா சுவர்ணலட்சுமி அவர்கள் நேற்று (29.12.2020) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சதாசிவஐயர், அனந்தலட்சுமி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமிஐயர், இராசம்மா அவர்களின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற நாகேந்திரசர்மாவின் அன்பு மனைவியும், சுரேந்திரக் குருக்கள் (பிரதம குரு- கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரம்) சுதாகரக்குருக்கள் (மலேசியா) குகனேசக்குருக்கள் (எழுதுமட்டுவாழ் பெரிய கேணிப் பிள்ளையார்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுபாசினி (கொழும்பு) சுபாசினி (மலேசியா) அனுஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ராகுலன், அமரர் பிரவீன், காவியா, நிதுசினி, ஸ்ரீவஸ்யன், ஸ்ரீகீரன், யுகானா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.12.2020) புதன் கிழமை நண்பகல் 12.00 மணிக்கு உடுவில் தொம்பை வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அஞ்சலி செலுத்துவதற்கு வருகைதருமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின் றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொம்பை வீதி,
உடுவில் கிழக்கு,
சுன்னாகம்
தொடர்புகளுக்கு:
குகனேச குருக்கள் - 077 9691426
     0212240160
சுரேந்திர குருக்கள் - 077 5930 517
சுதாகர குருக்கள் -  +60168999371