துயர் பகிர்வு

அமரர் முத்துமாணிக்கம் இராஜசிங்கம் (இளைப்பாறிய கணக்காய்வு அத்தியட்சகர் -)(Retired Superintendent of Audit)

தோற்றம் : 1935-02-16

மறைவு : 2020-12-30


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துமாணிக்கம் இராஜசிங்கம் அவர்கள் 30.12.2020 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துமாணிக்கம் - சிவபாக்கியம் தம்பதியரின்; அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் (முதலியார்) - ராசம்மா தம்பதியரின்; அன்பு மருமகனும் காலஞ் சென்ற ஞானம்மா வின் அன்புக் கணவரும் கௌரி (கனடா), காலஞ்சென்ற  ஸ்ரீதரன் மற்றும்                   கலாரஞ்ஜனி (பிரான்ஸ்), லதாரஞ்ஜனி (ஆரம்பப்பிரிவு ஆசிரியை-புலரி கல்வி நிலையம், சண்டிலிப்பாய்), காலஞ்சென்ற ஸ்ரீஞானராஜ்  மற்றும் டனராஜ் (சத்திரசிகிச்சை நிபுணர்- கந்தரோடை), ஹெமன்ரன் (கணித ஆசிரியர் - C.C.T.M.S.- வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் சர்வேஸ்வரி (சண்டிலிப்பாய்) , தயாபர சிங்கம் (ஜேர்மனி), பராபரசிங்கம் (கனடா) , பரயோகசிங்கம் (லண்டன்), துரை சிங்கம் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் கோபிகிருஷ்ணா (கனடா ) கிருஷ்ணமூர்த்தி (சண்டிலிப்பாய்), தயா (கந்தரோடை), கௌரி (வவுனியா) ஆகியோரின் அன்பு மாமாவும் துஷிதா, கிருஷாந்த் , நிரோஷாந்த் , நிலக் சினி, நிஷிஷன், நிஷாஷினி, யுலக்சினி, கோகுலக்சன் , டனுலக்சன், டினோஜன், சுதர்ஜன், ஹரிஷன், கிரிஷா, ரோஷன், தன்யா ஆகியோரின் அன்புப்பேரனும் மயிலாவின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரது பூதவுடல் இல 94 /1, கல்வளை வீதி, சண்டிலிப்பாயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (31.12.2020) வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி வரையிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுப் பின்னர் சண்டிலிப்பாய் திரேசம்மாள் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதன் பின்னர் பெரியவிளானில் அமைந்துள்ள யுவானியார் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
கௌரி (மகள் - கனடா       + 14167121302)
கலாரஞ்ஜனி  (மகள் - பிரான்ஸ்   + 33645775778)
லதாரஞ்ஜனி (மகள் - சண்டிலிப்பாய் - இலங்கை  0212240571/ 0774104779)
டனராஜ் (மகன் - கந்தரோடை - இலங்கை  0777370951)